Freelancer / 2026 பெப்ரவரி 09 , மு.ப. 09:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
தபால் கட்டணங்களை இன்று (09) முதல் அதிகரிப்பதற்கு தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய, குறைந்தபட்ச தபால் கட்டணத்தை 70 ரூபாயாக அதிகரிப்பதற்குத் தபால் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பொது மற்றும் வணிக கடித சேவைகளுக்கான அடிப்படை எடை வகுப்பு 20 கிராமில் இருந்து 30 கிராமாக திருத்தப்பட்டுள்ளதாகவும், துண்டுப்பிரசுரம் அல்லது துண்டுப்பிரசுரங்களின் தொகுப்பின் அதிகபட்ச எடை 100 கிராமில் இருந்து 120 கிராமாக திருத்தப்பட்டுள்ளதாகவும் தபால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
தொண்டு நிறுவனங்கள், சமூக சேவைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் அனுப்பும் கடிதங்களுக்கு முன்னர் வசூலிக்கப்பட்ட 30 ரூபாய் கட்டணம் தற்போது 50 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.
அமைச்சகங்கள் மற்றும் அரச நிறுவனங்களின் ஊடாக அனுப்பப்படும் தபால் பொருட்களுக்காக வசூலிக்கப்படும் கட்டணம் 110 ரூபாயில் இருந்து 130 ரூபாவாகவும், ஒரு அஞ்சல் அட்டையின் விலை 20 ரூபாயில் இருந்து 40 ரூபாயாகவும் உயர்த்தப்பட்டுள்ளது.
இருப்பினும், சாதாரண பொதிகளுக்கான கட்டணங்கள் மற்றும் இலங்கை தபால் கூரியர் சேவைகளுக்கு வசூலிக்கப்படும் கட்டணங்கள் திருத்தப்படாது என்று தபால் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. R
5 minute ago
20 minute ago
34 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
34 minute ago
44 minute ago