2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இருவேறு விபத்துகளில் இருவர் பலி

George   / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 07:17 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு - சிலாபம் பிரதான வீதியில் கட்டுநேரிய பிரதேசத்தில் உள்ள பாதசாரி கடவையொன்றில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

விபத்தில் படுகாயமடைந்த நபர், மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. கட்டுநேரிய பிரதேசத்தைச் சேர்ந்த 52 வயதுடைய நபரே உயிரிழந்துள்ளார்.

குறித்த நபர், பாதசாரி கடவையில் வீதியைக் கடந்தபோது வேகமாக வந்த கார் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்தை ஏற்படுத்திய காரின் சாரதி கைதுசெய்யப்பட்டுள்ளார்.

இதேவேளை, வத்தளை எவரிவத்தை பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளார்.

கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள், லொறியில் மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. களனி வனவாசல பிரதேசத்தைச் சேரந்த 58 வயதான நபரே இந்த விபத்தில் உயிரிழந்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .