2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இரண்டு வருடங்களில் 323 பேர் பலி

George   / 2016 ஓகஸ்ட் 31 , பி.ப. 09:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடந்த இரண்டு வருடங்களில் (2014 -2015) ரயில் விபத்துகளில் சிக்கி 323 பேர் உயிரிழந்துள்ளதுடன் 800 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டு 148 உயிரிழப்புகளும் 2015ஆம் ஆண்டு 175 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

இந்த கால எல்லைக்குள் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற 303 பேர் பலியானதுடன் 500 பேர் காயமடைந்துள்ளனர்.

ரயில் மோதியதால் 45 பேர் காயமடைந்ததுடன், ரயிலில் இருந்து விழுந்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். 135 பேர் காயமடைந்துள்ளனர். ரயில் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 33 பேர் காயமடைந்துள்ளனர்;.

ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்துகளில் 15 பேர் உயிரிழந்ததுடன் 87 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, தண்டவாளத்திலிருந்து ரயில் விலகியமை மற்றும் ஒன்றுடன் ஒன்று மோதிய சம்பவங்களில் எவரும்

உயிரிழப்பு, காயமடைந்த சம்பவங்கள் பதிவாகியிருக்கவில்லை.

இது இவ்வாறு இருக்க, ரயில் வீதியில் செல்வதால் ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ரயில் திணைக்களம் தெரிவிக்கின்றது.

அதுமட்டுமில்லாமல், சட்டவிரோதமான முறையில் ரயிலில் பயணித்த 1851 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்ட அபராதமாக 6,592,759 ரூபாய் அறவிடப்பட்டுள்ளது. கடந்த இரண்டு வருடங்களில் (2014 -2015) ரயில் விபத்துகளில் சிக்கி 323 பேர் உயிரிழந்துள்ளதுடன் 800 பேர் காயமடைந்துள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.

2014ஆம் ஆண்டு 148 உயிரிழப்புகளும் 2015ஆம் ஆண்டு 175 உயிரிழப்புகளும் பதிவாகியுள்ளன.

இந்த கால எல்லைக்குள் ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்ற 303 பேர் பலியானதுடன் 500 பேர் காயமடைந்துள்ளனர்.

ரயில் மோதியதால் 45 பேர் காயமடைந்ததுடன், ரயிலில் இருந்து விழுந்து 4 பேர் உயிரிழந்துள்ளனர். 135 பேர் காயமடைந்துள்ளனர். ரயில் மீது மேற்கொள்ளப்பட்ட கல்வீச்சு தாக்குதல்களில் ஒருவர் உயிரிழந்ததுடன் மேலும் 33 பேர் காயமடைந்துள்ளனர்;.

ரயில் கடவையில் இடம்பெற்ற விபத்துகளில் 15 பேர் உயிரிழந்ததுடன் 87 பேர் காயமடைந்துள்ளனர்.
இதேவேளை, தண்டவாளத்திலிருந்து ரயில் விலகியமை மற்றும் ஒன்றுடன் ஒன்று மோதிய சம்பவங்களில் எவரும்

உயிரிழப்பு, காயமடைந்த சம்பவங்கள் பதிவாகியிருக்கவில்லை.
இது இவ்வாறு இருக்க, ரயில் வீதியில் செல்வதால் ஏற்படும் உயிரிழப்பு சம்பவங்கள் அதிகரித்து வருவதாக ரயில் திணைக்களம் தெரிவிக்கின்றது.

அதுமட்டுமில்லாமல், சட்டவிரோதமான முறையில் ரயிலில் பயணித்த 1851 பேருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்ட அபராதமாக 6,592,759 ரூபாய் அறவிடப்பட்டுள்ளது.

- See more at: http://www.tamilmirror.lk/180861/-%E0%AE%B5%E0%AE%B0-%E0%AE%9F%E0%AE%99-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2-%E0%AE%B0%E0%AE%AF-%E0%AE%B2-%E0%AE%B5-%E0%AE%AA%E0%AE%A4-%E0%AE%A4-%E0%AE%95-%E0%AE%95%E0%AE%B3-%E0%AE%B2-%E0%AE%AA-%E0%AE%B0-%E0%AE%AA%E0%AE%B2-#sthash.zAvlwJmw.dpuf

  Comments - 0

அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .