2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இரத்தினக்கற்களை கொள்ளையிட்ட ஐவர் கைது

Editorial   / 2019 மார்ச் 12 , மு.ப. 11:43 - 0     - {{hitsCtrl.values.hits}}

நீர்கொழும்பு பகுதியில், ஐம்பது மில்லியன் ரூபாய் பெறுமதியான 3 இரத்தினக்கற்களை கொள்வனவு செய்யும் வகையில் வந்து, அவற்றை கொள்ளையிட்ட, மொங்​கோலிய பெண்ணொருவர் உட்பட, பாதாள குழு உறுப்பினர் அடங்களாக ஐவர் இன்று (12) கைது செய்யப்பட்டுள்ளனர்.

களுத்துறை மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் இவர்களை கைது செய்துள்ளனர்.

வெளிநாட்டுப் பெண்ணிடம் கூடுதல் விலைக்கு விற்கலாம் எனக் கூறி, இரத்தினபுரி பகுதியிலுள்ள இரத்தினக்கல் வர்த்தகர் ஒருவரை, ஹிம்புட்டான பகுதியைச் சேர்ந்த நபர், களுத்துறை பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றுக்கு அழைத்து, இரத்தினக்கற்களை கொள்ளையிட்டுள்ளாரென, தெரிவிக்கப்படுகிறது.

இந்நிலையில், குறித்த வர்த்தகர் வழங்கிய தகவலுக்கமைய, சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஒருவர், முன்னாள் இராணுவ வீரர் என தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களிடமிருந்து கொள்ளையிட்ட இரத்தினக்கற்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .