2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

‘இரவு 10 மணிக்குப் பிறகு பயணங்கள் மேற்கொள்ள வேண்டாம்’

Editorial   / 2019 ஜனவரி 30 , பி.ப. 12:03 - 0     - {{hitsCtrl.values.hits}}

இரவு 10 மணிக்குப் பிறகு பயணங்கள் செல்லாத வகையில் கடமைகளை முன்னெடுக்குமாறு, தான் சஜித் பிரேமதாஸவிடம் வேண்டுகோள் விடுத்ததாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

கொழும்பு- தாமரைத் தடாகத்தில் நேற்று இரவு இடம்பெற்ற கலாபூஷண விருது விழாவில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

நேற்றைய நிகழ்வில் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் அமைச்சர் சஜித் சுகயீனம் காரணமாக கலந்துக்கொள்ளவில்லை என்பதாலேயே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தில் மிகவும் நேர்மையான, திறமை மிக்க, வேலைப்பளு நிறைந்த அமைச்சர் சஜித் பிரேமதாஸவே என்று தான் நம்புவதாகத் தெரிவித்த ஜனாதிபதி, இந்நிக​ழ்வில் சஜித் கலந்துக்கொள்ளாவிட்டாலும் கலாசார அமைச்சு கிடைக்க வேண்டிய ஒருவருக்கே கிடைத்துள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.

எனவே அவர் விரைவில் நலம் பெற வேண்டுமென்றும் தான் பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .