Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 மார்ச் 11 , மு.ப. 09:33 - 0 - {{hitsCtrl.values.hits}}
மகேஸ்வரி விஜயனந்தன்
மதுபோதையில் டிபென்டர் வாகனத்தைச் செலுத்தும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கும் காலம் உருவாகியுள்ளதெனத் தெரிவித்த போக்குவரத்து மற்றும் வீதிப் பாதுகாப்புப் பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹன, இரவு விடுதிகள் அமைந்துள்ள இடங்களில், கடும் பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவதோடு, இன்றிரவு (11) முதல், வாகன சோதனைகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்றார்.
பொலிஸ் தலைமையகத்தில் நேற்று (10) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
பம்பலப்பிட்டி - பௌத்தாலோக்க மாவத்தை சந்திப் பகுதியில், பெப்ரவரி 24ஆம் திகதி இடம்பெற்ற வாகன விபத்தில் காயமடைந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த, பொரளை பொலிஸ் போக்குவரத்து பிரிவின் பொறுப்பதிகாரி சரத் சந்திர, நேற்று முன்தினமிரவு உயிரிழந்துள்ளாரென்றும், இவரது தகனக் கிரியை பொலிஸ்மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் தலைமையில், இன்று (11) மாலை 4 மணிக்கு பொரளை மயானத்தில் இடம்பெறுமென்றும் தெரிவித்தார்.
நீண்ட விசாரணையின் பின்னர் இச்சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் 7 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் எனத் தெரிவித்த அவர், அவர்களுள் அறுவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்றும் அதில், பெண்ணொருவரும் அடங்குகின்றார் என்றும் தெரிவித்தார்.
5 பாதுகாப்புக் கமெராக்களில் பெற்றுக்கொள்ளப்பட்ட சாட்சிகளின் அடிப்படையில், வாகனத்தைச் செலுத்தி வந்த பொலிஸ் அதிகாரியின் மகன், கைதுசெய்யப்பட்டு, விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் என்று தெரிவித்த அவர், இன்றைய தினம் (11) நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படுவார் என்றார்.
எனினும், இந்தச் சம்பவம் தொடர்பில் வேறொரு நபரே விபத்துக்குள்ளான வாகனத்தைச் செலுத்தி சென்றதாக சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படுகின்றமையானது, முற்றிலும் போலியான காட்சிகள் என்றும், இவ்வாறு செய்திகளை வெளியிடும் 15 பேரின் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளனவெனத் தெரிவித்த அவர், விசேடமாக பேஸ்புக் தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் தேவை ஏற்படுமாயின் இவர்கள் ஏனைய சாட்சிகளை எம்மிடம் முன்வைக்குமாறும் இதற்கமைய, எதிர்வரும் காலங்களில் இவ்வாறு தகவல் வழங்குபவர்களையும் நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவர் என்றும் தெரிவித்தார்.
3 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
6 hours ago