2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இரவு விடுதியானது விபச்சார விடுதி அல்ல

Editorial   / 2022 செப்டெம்பர் 21 , பி.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

நாட்டுக்கு டொலர் வேண்டுமென கூறுகிறார்கள், ஆனால் இரவு விடுதிகளுக்கு அனுமதி வழங்குவதில்லை. இரவு விடுதி என்பது விபச்சார விடுதி அல்ல. அதை இங்குள்ளவர்கள் புரிந்துகொள்ள வேண்டுமென இராஜாங்க அமைச்சர் டயனா கமகே கேட்டுக்கொண்டார்.

பாராளுமன்றத்தில் நேற்று (21) உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

நாடு முழுவதும் உள்ள அனைத்து மதுபான நிலையங்களையும் இரவு 10 மணிவரை திறக்க வேண்டும் என்ற யோசனையையும் முன்வைத்தார்.

நாடளாவிய ரீதியிலுள்ள மதுபான நிலைங்களை காலை 10 மணிமுதல் இரவு 10 மணிவரை திறக்க வேண்டும்.   இல்லையேல்ரவு 9 மணிக்கு மேல் மக்கள் கறுப்புச் சந்தைகளில் மதுபானங்களை கொள்வனவு செய்வார்கள். இதனூடாக அரசாங்கத்துக்கு கிடைக்க வேண்டிய வரி இல்லாமல் போகிறது என்றார்.

அத்தோடு பல்பொருள் அங்காடிகளுக்கும் மதுபான விற்பனைக்கான அனுமதி பத்திரங்களை வழங்க வேண்டுமெனவும் கோரினார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X