2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இராஜாங்க அமைச்சர்களுக்கு பீரிஸ் கடும் எதிர்ப்பு

Nirosh   / 2022 செப்டெம்பர் 14 , பி.ப. 07:20 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராஜாங்க அமைச்சர்களின் எண்ணிக்கையை 38ஆக அதிகரித்திருப்பது, சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து கிடைக்கும் உதவிக்குப் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் என பாராளுமன்ற உறுப்பினர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ் தெரிவித்தார்.

சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து உதவிகளைப் பெறுவதில் உள்ள தடைகளை போக்குவதில் அரசாங்கத்துக்கு அக்கறை இல்லை எனவும் கூறினார். 

இராணுவத்தினரைப் போல எண்ணிக்கைக் கொண்ட இராஜாங்க அமைச்சர்களை கொண்ட அரசாங்கத்துக்கு சர்வதேச அமைப்புகளிடமிருந்து ஒருபோதும் உதவிகள் கிடைக்காது என்றார்.

எந்தவொரு அபிவிருத்தித் திட்டங்களையும் முன்னெடுக்க நிதி இல்லாத இந்நேரத்தில், இராஜாங்க அமைச்சர்களை நியமித்திருப்பது பிரயோசனமற்றது எனவும் கூறினார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .