2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இராஜாங்க அமைச்சுகளுக்கான சுற்றறிக்கை அறிவிப்பு

Freelancer   / 2022 செப்டெம்பர் 12 , மு.ப. 07:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இராஜாங்க அமைச்சுகளுக்கென பிரத்தியேகமாக செயலாளர்களை நியமிக்காதிருப்பதற்குத்  தீர்மானிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க, விசேட சுற்றறிக்கை ஒன்றின் மூலம் அமைச்சுகளின் செயலாளர்களுக்கு இதனைத் தெரிவித்துள்ளார்.

இராஜாங்க அமைச்சிற்கான தேவைகள் சம்பந்தப்பட்ட அமைச்சரவை அமைச்சின் அங்கீகரிக்கப்பட்ட அதிகாரிகள் ஊடாக பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதுடன் புதிய பதவிகளை உருவாக்குவதற்கான கோரிக்கைகள் முன்வைக்கக்கூடாது எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர்களின் அதிகாரிகளுக்கு அமைச்சரவை அமைச்சிலேயே கட்டட வசதிகள் வழங்கப்பட வேண்டும் என சுற்றறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர்களின் அலுவலகங்களுக்கு அதிகபட்சமாக 11 ஊழியர்களை மாத்திரமே நியமிக்க முடியும்.

அத்துடன், இராஜாங்க அமைச்சர்களின் பணிக்கு அதிகபட்சமாக 3 உத்தியோகபூர்வ வாகனங்கள் ஒதுக்கப்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இராஜாங்க அமைச்சர்களின் உத்தியோகபூர்வ வாகனங்களுக்கு மாதாந்தம் 500 லீட்டர் எரிபொருள் கொடுப்பனவு வழங்கப்படும் என ஜனாதிபதியின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .