R.Maheshwary / 2021 ஏப்ரல் 01 , மு.ப. 02:15 - 0 - {{hitsCtrl.values.hits}}
உயிர்த்த ஞாயிறுத் தினத் தாக்குதல்களுடன் குற்றஞ்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக, இரண்டு மாதக் காலப்பகுதிக்குள் குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்படுமென, நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று (31) ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இது தொடர்பில் தொடர்ந்துரைத்துள்ள அமைச்சர், உயிர்த்த ஞாயிறுத்தினத் தாக்குதல்கள் தொடர்பில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள நபர்களுக்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன என்றார்.
அத்துடன், இந்தத் தாக்குதல்கள் தொடர்பில் விசாரணை செய்த ஜனாதிபதி ஆணைக்குழுவினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அறிக்கையின் உள்ளடக்கங்கள், சட்ட மா அதிபரால் ஆராயப்பட்டு வருகின்றன என்றும் அதன் பின்னர், சந்தேகநபர்களுக்கு எதிராக இரண்டு மாதங்களுக்குள் அதி குற்றப்பத்திரங்கள் தாக்கல் செய்யப்படுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .