Editorial / 2021 செப்டெம்பர் 16 , பி.ப. 12:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
அதிவேக நெடுஞ்சாலையில் இரு பக்கங்களிலும் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு இரும்பு வேலிகளை துண்டுத் துண்டுகளாக வெட்டி, களவெடுத்தார் என்றக் குற்றச்சாட்டின் கீழ் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹெய்யந்துடுவ தெவமின்ன பிரதேசத்தை ஊடறுத்துச் செல்லும் அதிவேக நெடுஞ்சாலையிலுள்ள இரும்பு வேலியையே இவர் வெட்டி, இரும்புகளை களவெடுத்துள்ளார் என சப்புகஸ்கந்த பொலிஸார் தெரிவித்தனர்.
அந்த இரும்புகளை விலைக்கு கொள்வனவு செய்த நபரும் பொலிஸாரின் பொறுப்பின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளார்.
அதிவேக நெடுஞ்சாலையின் தொழிற்நுட்ப அதிகாரி செய்த முறைப்பாட்டுக்க அமையவே இவ்விருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொது சொத்துக்கள் சட்டத்தின் கீழ் அவ்விருவரையும் மஹர நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.
18 minute ago
25 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
25 minute ago
3 hours ago