2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைக்கு கடத்தவிருந்த போதை மாத்திரைகளுடன் மூவர் கைது

Gavitha   / 2016 ஒக்டோபர் 21 , மு.ப. 09:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

முஹம்மது முஸப்பிர்

இராமேஸ்வரம், மண்டபம் அருகிலிருந்து இலங்கைக்கு போதைமாத்திரைகளை கடத்துவதற்கு முயற்சி செய்த மூன்று பேரை கைது செய்துள்ள இந்திய பொலிஸார், அவர்களிடமிருந்து பெருந்தொகையான போதை மருந்துகளையும் கைப்பற்றியுள்ளனர்.

இராமேஸ்லவரம் வழியாக இலங்கைக்கு போதை மாத்திரைகள் கடத்தப்படவுள்ளதாக பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலையடுத்து, இந்திய பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையின் போது, இராமேஸ்வரம் நோக்கி வந்த மருதி வாகனமொன்றை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதை மாத்திரைகள், 50 இலட்சம் ரூபாய் பெருமதியானவை என்றும் இது தொடர்புடைய மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் இந்திய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X