2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைக்கு தனியார் மருத்துவ கல்லூரி அவசியமில்லை

George   / 2017 பெப்ரவரி 01 , மு.ப. 04:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் தனியார் மருத்துவக் கல்லூரி அவசியமில்லை என ஒன்றிணைந்த எதிர்க்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது, அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்ய முடியும் என்பதால், இன்னும் காலம் இருக்கின்றது என்றார்.

எவ்வாறாயினும், இலங்கைக்குத் தனியார் மருத்துவக் கல்லூரி தேவையில்லை என்றும், தேவையென்றால் அரசாங்க மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க முடியும் என்றும் அவர் கூறினார்.

எனினும், தினேஷ் குணவர்தன அங்கம் வகித்த கடந்த அரசாங்கத்தின் காலத்திலேயே, மாலபேயில் அமைந்துள்ள தொழிநுட்பம் மற்றும் மருத்துவத்துக்கான தெற்காசிய நிறுவனமானது உருவாக்கப்பட்டது.

இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த தினேஷ் குணவர்தன, கடந்த ஆடசிக்காலத்தில் இந்தக் கல்லூரி உருவாக்கப்பட்டாலும், இலங்கை மருத்துவ சங்கத்தால், ஏற்றுக்கொள்ளப்படவில்லை எனத் தீர்ப்புக் கிடைத்தது” என்றார்.

இதேவேளை, அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர், லஹிரு வீரசேகர கைதுசெய்யப்பட்டமை, மாணவர் எழுச்சியை ஒழிக்கும் செயற்பாடு என நாடாளுமன்ற உறுப்பினர் டலஸ் அழகபெரும கூறினார்.

கடந்த ஆட்சியிலும் அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஒருங்கிணைப்பாளர்கள் பலர் கைதுசெய்யப்பட்டார்களே? என ஊடகவியலாளர் கேள்வியெழுப்பினார்.

அதற்குப் பதிலளித்த அழகபெரும, “எல்லா அராசங்கத்தின் ஆட்சியிலும் இந்தத் தவறு இடம்பெறுகிறது” என்றார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .