Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 பெப்ரவரி 14 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் ஜெனீவாவில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பில், இலங்கை தனது கடப்பாட்டை மீறியுள்ளதாக, சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் (ITPJ) குற்றஞ்சாட்டியுள்ளது.
இதைவிட இன்னும் இரண்டு நியமனங்கள் துன்பம் தருவதாக உள்ளதாக அந்தச் செயற்றிட்டம் குறிப்பிட்டுள்ளது. இது தொடர்பில் அந்தச் செயற்றிட்டம், நேற்று (13) வெளியிட்டிருந்த செய்திக் குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
ஐ.நா அறிக்கையில் சித்திரவதை செய்தவர் எனப் பெயர் குறிப்பிடப்பட்ட ஒருவர், பாதிக்கப்பட்டவர் மற்றும் சாட்சிகள் பாதுகாப்புக்கான அதிகாரசபை எனப்படும் அமைப்பில் நியமனம் செய்யப்பட்டுள்ளார் என்றும் சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டம் கூறியுள்ளது,
ஆட்டுக்குட்டிக்கு, ஓநாயைக் காவலுக்கு வைத்த மாதிரி இது உள்ளதென, அச் செயற்றிட்டத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
“இவ்வாறு இருக்கையில், அரசாங்கத்துக்கு அல்லது பாதுகாப்புப் படைகளுக்கு எதிராகச் சாட்சியமளிக்கும் எவரும், தனக்குப் பாதுகாப்புக் கிடைக்கும் என நம்பமாட்டார்” என அந்த செயற்றிட்டத்தின் பணிப்பாளர் ஜஸ்மின் ஸூக்கா கூறினார்.
“மாறாக அரசாங்கத்திடமிருந்து பாதுகாப்புக் கோருபவர், தனது உயிருக்கு ஆபத்தைத் தேடிக் கொள்பவராக இருப்பார். இந்த நியமனங்கள், புதிய அரசாங்கம், குற்றவாளிகளைப் பாதுகாக்கும் நோக்கத்தில் இருப்பதைக் காட்டுகின்றது” என, அவர் தெரிவித்தார்.
அரசாங்கத்தில் உருவாக்கப்பட்ட பாதுகாப்பு அதிகார சபைக்கு செய்யப்பட்ட சர்ச்சைக்குரிய வேறு நியமனங்களில் யுத்த இறுதியில் முன்னாள் போராளிகளுக்கு புனர்வாழ்வு வழங்கும் அதிகாரியாக இருந்த ஒருவரும் உள்ளார்.
இந்த புனர்வாழ்வு முகாம்களில் சித்திரவதை நடந்ததெனக் கூறி, நியாயமாக ஆதாரங்களை ஐ.நா.வின் விசாரணை ஒன்று கண்டுள்ளது. சித்திரவதைக்கு எதிரான ஐ.நா குழு விசாரிக்கும்படி பரிந்துரை செய்தது.
தாம் சித்திரவதை செய்யப்பட்டதாகக் கூறும் 14 பேரின் சாட்சியங்களை சர்வதேச உண்மை மற்றும் நீதி செயற்றிட்டமானது ஆவண ஆதாரமாகக் காட்டியுள்ளது.
இந்தப் புனர்வாழ்வு அதிகாரி புனர்வாழ்வுக்கு முழுப்பொறுப்பாக இருந்தார்.
இன்னொரு நியமனம், சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரியாக இருந்தவர். இவர், 2006இல், மூதூரில் 17 தொண்டு சேவையாளர்களின் கொலை வழக்கில் பாதுகாப்பு படைகளுக்கு எதிராக சாட்சியம் அளிக்கக் கூடாதெனப் பயமுறுத்தியவர்.
2015இல், தானும் சேர்ந்து ஐ.நாவில் கொண்டு வந்த தீர்மானத்தின் மீது தனது கடப்பாட்டை இலங்கை மீறுவதை இந்த நியமனங்கள் தெளிவாகக் காட்டுவதாக, அந்த செயற்றிட்டத்தின் பணிப்பாளர் ஜஸ்மின் ஸூக்கா மேலும் கூறினார்.
5 hours ago
5 hours ago
8 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
8 hours ago