2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இலங்கை பாதுகாப்பு படையினருக்கு செக் குடியரசில் பயிற்சி

Gavitha   / 2016 ஒக்டோபர் 24 , மு.ப. 03:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையிலுள்ள பாதுகாப்பு படையினருக்கு, செக் குடியரசுக்குச் சென்று பயிற்சி பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பமொன்று கிடைக்கவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.  

செக் குடியரசின் பாதுகாப்பு அமைச்சர் ஜக்கூப் லென்டோவ்ஸ்க்கும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தனவுக்கும் இடையில் கடந்த வெள்ளிக்கிழமை (21) இடம்பெற்ற கலந்துரையாடல் ஒன்றின் போதே, இது குறித்து தெரிவிக்கப்பட்டதாக, அமைச்சிலிருந்து வெளியிடப்பட்டுள்ள ஊடக அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.   

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, “எதிர்கால படைகள்” என்ற தொனிப்பொருளிலான மாநாடொன்றில் கலந்துக்கொள்வதற்காக, செக் குடியரசுக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.   


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X