2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இலங்கையில் வருடமொன்றுக்கு 2,000 தொழுநோயாளர்கள்

Princiya Dixci   / 2017 ஜனவரி 29 , மு.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் வருடமொன்றுக்கு 2,000 புதிய தொழுநோயாளர்கள் வரை இனங்காணப்படுகின்றனரென, உலக சுகாதார ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.

இன்று உலக தொழுநோய் தினமாகும். இத்தினம், ஜனவரி மாதம் 30ஆம் திகதியன்று அல்லது ஜனவரி மாதத்தின் இறுதி ஞாயிற்றுக்கிழமை அனுஷ்டிக்கப்படுகின்றது.

உலக சுகாதார நிறுவனத்தின் உலகத் தொழுநோயாளர் நிகழ்ச்சித்திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள 22 முன்னுரிமை நாடுகளில் இலங்கை, இந்தியா, இந்தோனேஷியா, மியன்மார், நேபாளம் என்பன அடங்குவதாகவும் தொழுநோயாளர்களில் 10 சதவீதமானோர் சிறுவர்களாக உள்ளனரெனவும் இலங்கைக்கான உலக சுகாதார ஸ்தாபனத்தின் தொடர்பாடல் உத்தியோகத்தர் கரென் றெய்டி தெரிவித்தார்.

"சர்வதேச ரீதியாக 212,000 தொழுநோயாளர்கள் உள்ளனர். இதில், 8.9 சதவீதமானோர் சிறுவர்கள். மொத்த நோயாளர்களில் 6.7 சதவீதமானோர் பார்வை குறைதல், சதை கரைதல் மற்றும் நகங்கள் நீளுதல் எனும் கடும் நோய்க் குறிகளைக் காட்டுபவர்களாக உள்ளனர்" என, உலக சுகாதார ஸ்தாபனத்தின் பிராந்தியப் பணிப்பாளர் டொக்டர் பூனம்சிங் தெரிவித்தார்.

"தொழுநோயாளர்கள்களுக்கு எதிரான பாகுபாடுகளை அனுமதிக்கும் சட்டங்கள் இரத்துச் செய்யப்பட வேண்டும். பஸ்களிலும் ரயில்களிலும்  பயணிக்கும் உரிமையைத் தடை செய்தல், மருத்துவ அல்லது உரிமை அடிப்படையில், இவ்வாறான பாகுபாட்டை அனுமதிக்க முடியாது" எனவும், டொக்டர் பூனம்சிங் மேலும் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .