2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இலங்கைக்கு 6ஆம் கட்டக் கடன்; IMF இணக்கம்

Editorial   / 2019 மார்ச் 01 , மு.ப. 10:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கைக்கான 6ஆம் கட்டக் கடன் கொடுப்ப​னவை வழங்க இணக்கம் தெரிவித்துள்ள சர்வதேச நாணய நிதியம், இலங்கைக்கான 1.5 பில்லியன் ரூபாய் கடன் திட்டத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்கவும் இணங்கியுள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் 1.5 பில்லியன் டொலர்கள் கடனை, மேலும் ஓராண்டுக்கு நீடிக்குமாறு இலங்கை அரசாங்கம் கோரிக்கை விடுத்திருந்தது.

அத்துடன், எதிர்வரும் முக்கிய தேர்தல்கள் காரணமாக, சர்வதேச நாணய நிதியம் விதித்துள்ள இறுக்கமான செலவுக் கட்டுப்பாடுகளைத் தளர்த்துமாறும், கோரிக்கை விடுத்திருந்தது.

அதற்கமைய, கடன் திட்டத்தை மேலும் ஒரு வருடத்துக்கு நீடிக்க, சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .