2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

இலங்கைக்கு வந்த இந்தியாவின் பிரபல நடிகர்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 17 , மு.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் நடைபெறும் படப்பிடிப்பிற்காக வருகை தந்திருக்கும் இந்திய திரைப்பட நடிகர் மம்முட்டியை இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திரமான சனத் ஜெயசூரிய சந்தித்துள்ளார்.

இதுதொடர்பில் தனது ருவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சனத் ஜெயசூரிய,  ''மூத்த மலையாள நடிகர் மம்முட்டியை சந்தித்தது பெருமையாக இருந்தது. சார் நீங்கள் தான் உண்மையான சூப்பர் ஸ்டார். இலங்கை வந்ததற்கு நன்றி.

அனைத்து இந்திய நட்சத்திரங்களையும் நண்பர்களையும் எங்கள் நாட்டை பார்க்க அழைக்க விரும்புகிறேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சுற்றுலாத் தூதுவராக சனத் ஜெயசூரிய அண்மையில் நியமிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .