Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 01, செவ்வாய்க்கிழமை
Editorial / 2019 மார்ச் 02 , பி.ப. 12:32 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் கடந்த வருடத்தின் இறுதிப் பகுதியில் ஏற்பட்ட அரசியல் நெருக்கடியைத் தொடர்ந்து, பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டத்தைச் சரியான பாதையில் முன்னெடுத்துச் செல்ல, இலங்கை மேற்கொள்ளும் முயற்சிகளை சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் பாராட்டியுள்ளனர்.
மான்யூலா கோரேட் (Manuela Gorett) தலைமையிலான நிதியத்தின் பிரதிநிதிகள், கடந்த 14ஆம் திகதி முதல் 28ஆம் திகதி வரை இலங்கையில் தங்கியிருந்து ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர். இலங்கையின் பொருளாதார மறுசீரமைப்பு வேலைத்திட்டங்கள் பற்றி, அக்குழு அதிகாரிகள் மட்டத்தில் பேச்சுவார்த்தை நடத்தியிருந்தனர்.
பொருளாதார மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலை முழுமையாக பூர்த்தி செய்ய, மேலதிகமாக ஒரு வருடத்தை அவகாசமாக வழங்குமாறு, இலங்கை அதிகாரிகள் முன்வைத்த கோரிக்கைக்கு, சர்வதேச நாணய நிதியம் இணக்கம் தெரிவித்துள்ளது.
நிதி வசதிகளைப் பன்படுத்தி, 2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம், நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவிருக்கிறது. இதற்கமைய, ஐந்தாவது மீளாய்வுக் கூட்டம், எதிர்வரும் மே மாதத்தில் பூர்த்தி செய்யப்படவுள்ளது. பொருளாதார நடவடிக்கைகளில் குறைபாடுகள் இருந்தாலும், உரிய குறைபாடுகள் தற்சமயம் நீங்கிவருகின்றன என்று, சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
7 hours ago
8 hours ago