R.Maheshwary / 2021 மார்ச் 28 , மு.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
சுயெஸ்கால்வாயில் கப்பல் ஒன்று இறுகியுள்ளதன் காரணமாக, இலங்கையில் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாதென எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.
இலங்கையில் போதுமானளவு எரிபொருள் கையிருப்பில் உள்ளதென்றும் அவர் தெரிவித்துள்ளார்.குறித்த கால்வாயில் 400 மீற்றர் நீளமான கப்பலொன்று இறுகியுள்ளதன் காரணமாக, உலக பொருளாதாரம் பாரிய நெருக்கடியை சந்தித்துள்ளதென்றும் இக்கப்பலை அகற்ற 5- 14 நாள்கள் செல்லுமென்றும் இது தொடர்பான விசேட நிபுணர்கள் தெரிவிப்பதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் இக்கப்பல் காரணமாக பல நாடுகளின் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் பாரிய நெருக்கடியைச் சந்தித்தாலும் இலங்கையின் எரிபொருள் விநியோகத்துக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படாதென பொறுப்புடன் கூறுவதாகத் தெரிவித்துள்ளார்.
ஒருபுறம் இலங்கையில் 14 நாள்களுக்கு போதுமானவு எரிபொருள் களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அதேப்போல் இலங்கைக்கு எரிபொருளைக் கொண்டு வரும் அனைத்து கப்பல்களும் மத்திய கிழக்கின் குவைட், ஓமான், சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளிலிருந்தே வரவுள்ளதால் சுயெஸ் கால்வாயிலில் கப்பல் இறுகியுள்ளமை இலங்கையின் எரிபொருள் விடயங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தாதென தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .