2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

இலங்கையில் மின்சார முச்சக்கர வண்டிகள்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 16 , பி.ப. 11:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் எரிபொருள் நெருக்கடி ஏற்பட்டுள்ள நிலையில், புதிதாக மின்சார முச்சக்கர வண்டி இன்று (16)  அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அமெரிக்க அரசாங்கம், அதன் சர்வதேச அபிவிருத்திக்கான முகவரகமான யு.எஸ்.எய்ட்  ஊடாக, இலங்கையில் சமூக மற்றும் பொருளாதார நிலையான வளர்ச்சியை முன்னெடுப்பதற்கு சுத்தமான எரிசக்தி திட்டத்தை விரைவுபடுத்த உறுதிபூண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் இன்று (16)  இலங்கையின் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர மற்றும் இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் ஜூலி சங் ஆகியோர் முன்னிலையில் புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்று கையெழுத்திடப்பட்டது.

இந்த கூட்டாண்மையின் கீழ், இலங்கையின் மிகப்பெரிய வாகன நிறுவனமான டிபிஎம்சி, முச்சக்கர வண்டிகளை மின்சார முச்சக்கர வண்டிகளாக மாற்றி விற்பனைக்குப் பிந்திய சேவைகளாக நாடளாவிய ரீதியில் உள்ள தமது சேவை மையங்கள் மூலம் வழங்கவுள்ளது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .