2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

இலங்கையில் வாகனங்களின் எண்ணிக்கை 7 மில்லியன்

Editorial   / 2019 மார்ச் 25 , பி.ப. 02:34 - 0     - {{hitsCtrl.values.hits}}

நாட்டில் பயன்படுத்தப்பட்டுவரும் வாகனங்களின் எண்ணிக்கை, 7 மில்லியனை விட அதிக​ரித்துள்ளதாக தெரிவித்த அமைச்சர் பாட்டலி  சம்பிக்க ரணவக்க இதனாலேயே இன்று வாகன நெரிசல் அதிகரித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

போக்குவரத்து மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சுக்கான, வரவு செலவு திட்ட நிதி ஒதுக்கீடு தொடர்பில், நாடாளுமன்றில் இன்று (25) இடம்பெற்ற  குழுநிலை விவாதத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது தொடர்ந்து கருத்துரைத்த அவர், பொது வாகனங்களை விட தனியார் வாகனங்களே வீதிகளை ஆக்கிரமித்துள்ளதாகவும், இதனால் கடும் வாகன நெருக்கடி ஏற்படுவதாகவும் தெரிவித்தார்.

 எனவே வாகன நெருக்கடியைக் குறைப்பதற்கு பொது பயணிகள் போக்குவரத்தை நவீனமயப்படுத்த வேண்டியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .