Freelancer / 2026 பெப்ரவரி 11 , மு.ப. 08:57 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கைக்கான பாகிஸ்தான் உயர்ஸ்தானிகர், ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் பஹீம் உல் அஜீஸ் , இலங்கை வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தை நேற்று (10) சந்தித்தார்.
இலங்கையிலான அவரது பதவிக்காலம் நிறைவடையவுள்ள நிலையில், இந்த சந்திப்பு இடம்பெற்றது.
இந்த சந்திப்பின் போது, இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டித் தொடர் தொடர்பாகப் பாகிஸ்தான் எடுத்திருந்த தீர்மானத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக உயர்ஸ்தானிகர் தெரிவித்தார்.
இருபதுக்கு 20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவுக்கு எதிரான போட்டியில் பங்கேற்பதில்லை என பாகிஸ்தான் முன்னதாக எடுத்திருந்த முடிவைக் கைவிட்டுள்ளது.
இலங்கையுடன் முன்னெடுக்கப்பட்ட 3 நாள் இராஜதந்திரப் பேச்சுவார்த்தைகளின் பலனாக, கருத்து வேறுபாடுகளைக் களைந்து இப்போட்டியில் பங்கேற்க பாகிஸ்தான் உடன்பட்டுள்ளது.
இந்த சிக்கலைத் தீர்ப்பதில் இலங்கை ஆற்றிய ஆக்கபூர்வமான மத்தியஸ்தப் பணிகளை உயர்ஸ்தானிகர் வெகுவாகப் பாராட்டினார்.
உலகக் கிண்ணப் போட்டிகள் தொடர்பான நிச்சயமற்ற தன்மைகளை தீர்க்க அமைச்சர் விஜித ஹேரத் தொடர்ச்சியாக மேற்கொண்ட இராஜதந்திர முயற்சிகளுக்கு உயர்ஸ்தானிகர் தனது பாராட்டுகளைத் தெரிவித்தார். (a)

5 minute ago
20 minute ago
34 minute ago
44 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 minute ago
20 minute ago
34 minute ago
44 minute ago