Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kanagaraj / 2016 ஓகஸ்ட் 31 , பி.ப. 11:31 - 0 - {{hitsCtrl.values.hits}}
பியகமவில் உள்ள தனியார தொழிற்சாலையில் பணியாற்றிய, லிந்துலை சென்கூம்ஸ் தோட்டத்தைச் சேர்ந்த தீனதயாவின் நோபல் (வயது 26) என்ற இளைஞன், கத்திக் குத்துக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார்.
பியகமவிலுள்ள மென்பான தொழிற்சாலையில் தொழில்புரிந்து வந்த மேற்படி இளைஞனுக்கும் அதே தொழிற்சாலையில் தொழில்புரிந்த மற்றுமொரு நபருக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலே கத்திக்குத்துக்கு காரணமென பொலிஸார் கூறினர்.
இந்த வேளை, கத்தியால் குத்தியதாகக் கூறப்படும், சந்தேகநபரொருவர் தப்பிச்செல்வதற்கு முயன்றபோது, முச்சக்கரவண்டி சாரதி, அவரை பொலிஸில் பிடித்துகொடுத்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற தினத்தன்று, மிகவும் பதற்றத்துடன் வந்தவர், அந்த தொழிற்சாலைக்கு அண்மையில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த முச்சக்கரவண்டியில் ஏறி, அவசரமாக செல்லவும் அவசரம், அவசரம் என்று சாரதிக்கு கடும் தொந்தரவு கொடுத்துள்ளார்.
அவரின் தொந்தரவில் சந்தேகம் கொண்ட சாரதி, பியகம-பண்டாரவத்தை பகுதியில் கடமையில் இருந்த பொலிஸ் கான்ஸ்டபிளிடம் ஒப்படைத்துள்ளார். அதன்பின்னர் பொலிஸார், சந்தேகத்தின் பேரில் அவரை கைதுசெய்துள்ளனர்.
38 minute ago
9 hours ago
15 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
9 hours ago
15 Aug 2025