Freelancer / 2026 ஏப்ரல் 03 , மு.ப. 06:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
மேற்கு ஆசியாவில் மோதல் தொடரும் நிலையில், ஈரானில் இருந்து 1,200 இற்கும் மேற்பட்ட இந்தியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.
புதுடில்லியில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால்,
ஈரானில் மத்திய அரசு ஒருங்கிணைப்பு முயற்சிகளை நெருக்கமாக கையாண்டு, ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் வழியாக மீட்புப் பணிகள் மேற்கொண்டு வருகிறது. இதனால், ஈரானிலிருந்து இதுவரை சுமார் 1200 இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர். அவர்களில் 845 பேர் மாணவர்கள். இதில் 996 பேர் ஆர்மீனியாவுக்கும், 204 பேர் அஜர்பைஜானுக்கும் அனுப்பப்பட்டனர். மீட்கப்பட்டவர்களுக்கு அங்கிருந்து வெளியுறவு அமைச்சகம் உதவி செய்து வருகிறது.
இந்தியர்கள் பாதுகாப்பாக நம் நாட்டுக்குத் திரும்புவதை உறுதி செய்வதற்காக, ஆர்மீனியா மற்றும் அஜர்பைஜான் ஆகிய இரு நாடுகளிலும் உள்ள இந்தியத் தூதரகங்கள் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் வெளியுறவு அமைச்சகம் நெருக்கமாகப் பணியாற்றி வருகிறது என்றார். (a)
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
5 hours ago
5 hours ago