2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

உணவுக்கு ‘சிவப்பு எச்சரிக்கை

Kogilavani   / 2017 ஜனவரி 17 , மு.ப. 04:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

கடுமையான வரட்சி நீடிப்பதனால், எதிர்காலத்தில் உணவுக்குத் தட்டுப்பாடு ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் இருப்பதாக, விவசாயத்துறைசார் அதிகாரிகள் எதிர்வுகூறியுள்ளனர். 

ஆகையால், ஒவ்வொரு நாட்களும் உணவு தயாரிக்கின்ற போது, சிக்கனத்தைக் கையாளவேண்ணடும் என்றும் அவ்வதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.   

இந்த விவகாரம் தொடர்பில் ஹம்பாந்தோட்டை மாவட்ட, மாகாணங்களுக்கு இடையிலான விவசாய உதவிப் பணிப்பாளர் நாலிகா ரூபசிங்ஹ தெரிவிக்கையில்,   

உணவுகளை தயாரிக்கின்ற போது, சிக்கனத்தைக் கையாளவேண்டும், வீடுகளில், காரியாலயங்கள், சிற்றுண்டிச்சாலைகள், உணவகங்களில் தயாரிக்கப்படுகின்ற உணவுகளில் அதிகமானவை வீசப்படுகின்றன.   

ஆகையினால், தேவைக்கு அதிகமாக உணவுகளைத் தயாரிக்காமல், தேவைக்கேற்ப உணவுகளைத் தயாரிக்கவேண்டும் என்றும் அவர் ஆலோசனை வழங்கியுள்ளார்.   

மேலதிகமாக ஒரு நேரம் உணவை உட்கொள்வதற்கோ அல்லது களஞ்சியப்படுத்தி வைத்திருக்கும் முறைமையை கையாள்வது மிகமிக உசிதமானது என்றும் சுட்டிக்காட்டிய அவர், வீடுகளில் சமைக்கும் போது, இந்த முறைமையைக் கையாண்டால், நன்மைபயக்கும் என்றும் சுட்டிக்காட்டினார்.   

இதேவேளை, மலையகத்தில் நிலவும் வரட்சியின் காரணமாக, மரக்கறிகளின் விலைகள் அதிகரித்துள்ளன. தற்போதைய நிலைமை இன்னும் சில நாட்களுக்கு நீடிக்குமாயின் மரக்கறிகளுக்குக் கடும் தட்டுப்பாடு நிலவும் என்றும் மரக்கறி விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.   

கடுமையான வரட்சி, பனிப் பொழிவு மற்றும் தண்ணீர்த் தட்டுப்பாடு, ஆகியவற்றின் காரணமாகவே மரக்கறிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் விவசாயிகள் தெரிவித்துள்ளனர்.   

இதேவேளை, மரக்கறிகளுக்குத் தட்டுபாடு நிலவும் என்ற அச்சத்தினால், ஒருசில கடைகளில், மரக்கறிகளின் விலைகள் என்றுமில்லாத அளவுக்கு அதிகரித்துள்ளதாகவும் மலையகத்தைச் சேர்ந்த நுகர்வோர் தெரிவித்துள்ளனர்.    


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .