2025 ஜூலை 09, புதன்கிழமை

உயர்நீதிமன்ற மார்ஷலிடம் வாசுதேவ முறையிட்டார்

Editorial   / 2018 நவம்பர் 13 , மு.ப. 10:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


உயர்நீதிமன்ற வளாகத்தில் நேற்​று  (12) இடம்பெற்ற சம்பவம் தொடர்பில், அமைச்சர் வாசுதேவ நாணயக்கார உயர்நீதிமன்றத்தின் மார்ஷலிடம் முறைபாடு செய்துள்ளார்.

ஜனாதிபதியால் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமைக்கு எதிராக நேற்றைய தினம் பல்வேறு கட்சிகள், சிவில் பிரதிநிதிகள் என பலரால் தாக்கல் செய்யப்பட்ட 13 மனுக்கள் தொடர்பான பரிசீலனை உயர்நீதிமன்றத்தில் இடம்பெற்ற வேளை, உயர்நீதிமன்றத்துக்கு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார வருகைத் தந்து வெளியேறும் போது, அங்கு கூடியிருந்த  சிலர் அமைச்சரைப் பார்த்து “ ஊ” சத்தமிட்டுள்ளனர்.

இதனையடுத்து, அமைச்சர் வாசுதேவ நாணயக்கார, உயர்நீதிமன்ற மார்ஷலிடம் இது தொடர்பில் முறைபாடு செய்ததையடுத்து, உயர்நீதிமன்றத்தின் கண்ணியத்தைப் பாதுகாக்க தான் நடவடிக்கை எடுப்பதாக, அமைச்சரிடம் மார்ஷல் உறுதியளித்துள்ளார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .