2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல்;புதிய செயலணி நியமனம்

Editorial   / 2020 பெப்ரவரி 24 , பி.ப. 02:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவினர் முன்னெடுத்து வரும் முன்னேற்றம் தொடர்பில் ஆராய, பாதுகாப்பு அமைச்சின் செயலணியொன்று நியமிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய புலனாய்வு பிரதானி மேஜர் ஜெனரல் ஜகத் அல்விஸின் தலைமையில் 6 உறுப்பினர்களைக் கொண்டதாக இந்த செயலணி நியமிக்கப்பட்டுள்ளது.

குறித்த தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து ஆராய்ந்து, அது தொடர்பில் வாரத்துக்கு ஒரு தடவை பாதுகாப்பு அமைச்சின் செயலாளருக்கு அறிக்கையை முன்வைக்க வேண்டியது இந்தச்  செயலணியின் பணியென்றும் தெரிவிக்கப்படுகின்றது.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .