2025 ஓகஸ்ட் 18, திங்கட்கிழமை

உறவை சீர்குலைக்க வேண்டாம்; சீனா வலியுறுத்தல்!

J.A. George   / 2022 ஓகஸ்ட் 09 , மு.ப. 07:53 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு  செல்லும் உயர் தொழில்நுட்ப சீன ஆராய்ச்சிக் கப்பலின் பயணத்தை நிறுத்துமாறு இலங்கை விடுத்த, கோரிக்கையால் சீனா அதிருப்தி அடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், இந்த விடயம் குறித்து இந்தியாவை சீனா கடுமையாக விமர்சித்துள்ளதுடன், பாதுகாப்புக் காரணங்களை  மேற்கோள் காட்டி கொழும்புக்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது என்று சீனா தெரிவித்துள்ளது.

ஆகஸ்ட் 11 முதல் 17 வரை ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் நங்கூரமிட  திட்டமிடப்பட்ட சீன விண்வெளி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பு ஆராய்ச்சிக் கப்பலான 'யுவான் வாங் 5' இன் வருகையை ஒத்திவைக்குமாறு சீனாவிடம் இலங்கை கேட்டுக் கொண்டுள்ளது. 

இந்த கோரிக்கைக்கு பதிலளித்துள்ள சீன வெளியுறவு அமைச்சகத்தின் பேச்சாளர், வாங் வென்பின் பாதுகாப்பு பிரச்சினைகளை மேற்கோள்காட்டி இலங்கைக்கு அழுத்தம் கொடுப்பது அர்த்தமற்றது என்று கூறியுள்ளார்.

சீனாவின் அறிவியல் ஆய்வுகளை நியாயமான மற்றும் விவேகமான முறையில் பார்க்கவும் சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான இயல்பான பரிமாற்றத்தை சீர்குலைப்பதை நிறுத்தவும் சீனா, சம்பந்தப்பட்ட தரப்பினரை வலியுறுத்துகிறது என்றும் வாங் தெரிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X