2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

உலக நாடுகளுக்கு மீண்டும் வலியுறுத்தல்

Freelancer   / 2022 செப்டெம்பர் 15 , பி.ப. 04:15 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொரோனாவின் எதிர்கால வைரஸ் திரிபுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் விழிப்புணர்வைத் தக்க வைத்துக் கொள்ளுமாறும் உலக சுகாதார ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம் டெட்ரோஸ் அதானோம் கெப்ரேயஸ் உலக நாடுகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கொரோனா தொற்றுநோயை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உலகம் ஒருபோதும் சிறந்த நிலையில் இருந்ததில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
 
2019 ஆண்டின் இறுதிப்பகுதியில் சீனாவில் தோன்றிய இந்த வைரஸ் காரணமாக உலகளாவிய ரீதியில்  கிட்டத்தட்ட 6.5 மில்லியன் மக்கள் உயிரிழந்திருந்தனர்.

2020 ஆம் ஆண்டு மார்ச் மாதத்துக்குப் பின்னர், கொரோனா மரணங்கள் மிகவும் குறைவடைந்துள்ளதாக உலக சுகாதார ஸ்தாபனம் கடந்த வாரம் தெரிவித்திருந்தது.

எனினும், கொரோனாவின் எதிர்கால வைரஸ் திரிபுகளில் இருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்ளுமாறும் விழிப்புணர்வைத் தக்க வைத்துக் கொள்ளுமாறும் ஸ்தாபனத்தின் பணிப்பாளர் நாயகம், உலக நாடுகளை மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.

கடினமாக ஓட வேண்டிய நேரம் இதுவென்றும், தங்களது கடின உழைப்பின் பலனைப் பெறமுடியும் என்று தெரிவித்துள்ள அவர், 100% அதிக ஆபத்துள்ள தரப்பினர் தடுப்பூசியை பெற்றுக் கொள்ளவும் வைரஸுக்கான பரிசோதனையைத் தொடரவும் உலக நாடுகளை வலியுறுத்தினார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .