Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
George / 2017 ஜனவரி 31 , மு.ப. 04:34 - 0 - {{hitsCtrl.values.hits}}
-ஜே.ஏ.ஜோர்ஜ
உள்நாட்டு வைத்திய முறையை மேம்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்த சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, மேற்கத்தைய நாடுகளால் அடைய முடியாத வைத்திய இலக்குகளை, இலங்கையின் ஆயுர்வேத முறையால் எட்டுவதற்கு எதிர்ப்பார்த்துள்ளதாக கூறினார்.
இலங்கையில் தயாரிக்கப்பட்ட ஆயுர்வேத வைத்திய முறை மருந்தான பிராணஜீவ அறிமுக நிகழ்வு, பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு திங்கட்கிழமை மாலை நடைபெற்றபோது, பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே இலங்கைக்கு மேலேத்தேய வைத்திய முறை அறிமுகப்படுத்தப்பட்டது. எமது உள்நாட்டு வைத்திய முறையில் பல்வேறு சிறப்புகள் இருந்தாலும் அவை இன்றைய நாட்களில் மறைக்கப்பட்டு அல்லது நடைமுறையில் குறைந்தளவு பாவனையில் உள்ளன.
ஆயுர்வேத மருத்துவ முறைகளை அறிந்தவர்கள் அதனை மற்றவர்களுக்கு சொல்வதில்லை. அது பரம்பரை வழியாகவே செல்கின்றது. திடீரென்று அவர் உயிரிழந்துவிட்டால் அவருடன் அந்த வைத்திய முறை அழிந்துவிடுகின்றது.
புத்தகங்களில் இருந்தாலும் அவையும் முழுமையான முறையில் பெற்றுக்கொள்ள முடியாத நிலை காரணப்படுகின்றது.
ஆனால், மேலைத்தேய நாடுகளில் இவ்வாறு இல்லை. அவர்கள் எதையாவது கண்டுபிடித்தால் அதனை மற்றவர்களுக்கும் தெரியப்படுத்துவார்கள். குறித்த கண்டுபிடிப்புக்கான உரிமையை பெற்றுக்கொண்டு மற்றவர்களின் பயன்பாட்டுக்கு அதனை வழங்குவார்கள்.
கொரியாவை எடுத்துக்கொண்டால், அங்கு 85 சதவீதம் உள்நாட்டு வைத்திய முறையே பயன்படுத்தப்படுவதுடன் அங்குள்ளவர்கள் ஆரோக்கியமாக உள்ளனர். இலங்கையிலும் உள்நாட்டு வைத்திய முறையின் பயன்பாட்டை அதிகரிக்க நடவடிக்கை எடுத்துள்ளோம்.
இலங்கையில் உற்பத்திச் செய்யப்படும் ஆயுர்வேத மருந்துகளுக்க வெளிநாடுகளில் சிறந்த வரவேற்பு உள்ளது” என்றார்.
4 hours ago
8 hours ago
16 Aug 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
8 hours ago
16 Aug 2025