2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றியதால் மரணம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 17 , பி.ப. 05:27 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.றொசாந்த் 

யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் நண்பன் வீட்டுக்கு சென்ற நிலையில் உயிரிழந்தவர்,  ஊசி மூலம் போதைப்பொருளை ஏற்றியமையால் தான் உயிரிழந்தார் என பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது. 

கோப்பாய் பகுதியை சேர்ந்த குறித்த நபர் திருநெல்வேலி பகுதியில் உள்ள தனது நண்பர் ஒருவரின் வீட்டுக்கு நேற்றைய தினம் செவ்வாய்க்கிழமை சென்றுள்ளார். அங்கு கதிரையில் அமர்ந்தவர் சிறிது நேரத்தில் மயங்கி சரிந்து உயிரிழந்தார் என பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவிக்கப்பட்டது. 

இந்நிலையில் யாழ்.போதனா வைத்திய சாலையில் இன்றைய தினம் மேற்கொள்ளப்பட்ட பிரேத   பரிசோதனையின் போது, கையில் ஊசி மூலம் போதை பொருளை செலுத்தியமையாலையே உயிரிழப்பு ஏற்பட்டது என கண்டறியப்பட்டுள்ளது. 

அதனை அடுத்து கோப்பாய் பொலிஸார் தமது விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர். 

இதேவேளை யாழில் கடந்த மூன்று மாத கால பகுதிக்குள் 7க்கும் மேற்பட்டவர்கள் போதை பொருளை ஊசி மூலம் செலுத்தியதில் உயிரிழந்துள்ளனர்.  (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .