2025 ஜூலை 08, செவ்வாய்க்கிழமை

எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி காலமானார்

Editorial   / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 06:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

எகிப்து நாட்டின் முன்னாள் ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக், தனது 91ஆவது வயதில் இன்று (25) காலமானார்.

எகிப்து நாட்டின் நான்காவது ஜனாதிபதியான இவர், அந்நாட்டிலுள்ள வைத்தியசாலையொன்றில் அறுவைச் சிகிச்சையொன்று செய்யப்பட்ட பின்னரே, உயிரிழந்துள்ளார்.

1981ஆம் ஆண்டு தொடக்கம் 2011ஆம் ஆண்டு வரையான 30 வருடங்களுக்கு எகிப்து நாட்டின் ஜனாதிபதியாக இருந்த இவர், 2011ஆம் ஆண்டில் ஏற்பட்ட மக்கள் புரட்சியின் பின்னர் பதவி விலகினார்.

மக்கள் புரட்சியின் பின்னர் சிறையில் அடைக்கப்பட்டிருந்த இவர், 2017ஆம் ஆண்டு சிறைச்சாலையில் இருந்து விடுதலை செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .