2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

எட்வர்ட் ஸ்னோடனுக்கு குடியுரிமை வழங்கிய ரஷ்யா

Freelancer   / 2022 செப்டெம்பர் 27 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

அமெரிக்க தேசிய பாதுகாப்பு ஏஜென்சியின் முன்னாள் ஒப்பந்ததாரரான எட்வர்ட் ஸ்னோடனுக்கு ஜனாதிபதி விளாடிமிர் புடின் ரஷ்ய குடியுரிமை வழங்கியுள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி நேற்று (26) கையெழுத்திட்ட ஆணையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரஷ்ய குடியுரிமை வழங்குவதற்கான ஆணையில் பட்டியலிடப்பட்ட 75 வெளிநாட்டவர்களில் ஸ்னோடனும் ஒருவராவார். இதற்கான உத்தரவு அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

அமெரிக்க தேசிய பாதுகாப்பு நிறுவனத்தின் முன்னாள் உறுப்பினரான  எட்வர்ட் ஸ்னோடன், அமெரிக்க அரசாங்க கண்காணிப்பு திட்டங்களை விவரிக்கும் இரகசிய ஆவணங்களை கசியவிட்டதை அடுத்து, அமெரிக்காவில் வழக்குத் தொடரப்படுவதைத் தவிர்ப்பதற்காக, அங்கிருந்து தப்பிச்சென்று 2013 முதல் ரஷ்யாவில் வசித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X