R.Maheshwary / 2021 மார்ச் 29 , மு.ப. 12:23 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொரோனா வைரஸூக்கு மத்தியில், கடந்த வருட தமிழ்- சிங்களப் புத்தாண்டு கொண்டாடப்பட்டது. எனினும், இவ்வருடம் புற்றுநோயை உருவாக்கக் கூடிய தேங்காய் எண்ணெயுடன் புத்தாண்டைக் கொண்டாட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதெனத் தெரிவித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, இந்த அரசாங்கத்தின் கீழ் ஆயிரம் மெற்றிக் தொன் தேங்காய் எண்ணெய் கொண்டு வரப்பட்டுள்ளது. அது சாதாரணமான எண்ணெய் அல்ல; புற்றுநோயைத் தோற்றுவிக்கக் கூடிய எண்ணையே திருட்டு வழியில் இலங்கைக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது என்றார்.
'நாம் இந்த வருடம் புத்தாண்டை தேங்காய் எண்ணெய் அசுரனுடன் போராடியே கொண்டாடப் போகிறோம்' என்றார்.
திஸ்ஸமஹராமையில் நேற்று முன்தினம் (27) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தொடர்ந்து தெரிவித்த அவர்,
இறக்குமதி செய்யப்பட்டுள்ள இந்த எண்ணெய், உரிய தரமின்றி உள்ளது. அது புற்றுநோயை ஏற்படுத்தலாமென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த எண்ணெய்க்குதர் தடையும் விதித்துள்ளது.
எனினும், சில நிறுவனங்கள் ஒன்றிணைந்து, எண்ணெய் மாதிரிகளை சுத்திகரித்து, தரம் பிரிக்கும் நிறுவனத்திடம் வழங்கி, தர நிர்ணய நிறுவனத்திடமிருந்து சான்றிதழைப் பெற்றுள்ளன.
அதுமாத்திரமின்றி சுங்கத்தில் பாரிய பிரச்சினைகள் காணப்படுகையில், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் களஞ்சியசாலைகளில் இந்த எண்ணெயை களஞ்சியபடுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இப்போது என்ன நடந்துள்ளதென்றால் இந்த எண்ணெய் சந்தைக்கு விநியோகிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் சிஸ்டத்தை உருவாக்கி வருவதாக மொட்டுவிலுள்ள நபர்கள் கூறினார்கள். ஆனால், இந்த அரசாங்கத்தைப் போலவே சிஸ்டமும் பெயில் ஆகிவிட்டது எனத் தெரிவித்த சஜித் பிரேமதாஸ, புற்றுநோயை ஏற்படுத்தும் எண்ணெயை சந்தைகளுக்கு விநியோகித்துள்ளனர். கம்பனிகாரர்களை பாதுகாக்க, அவர்கள், பணத்தை சம்பாதிப்பதற்காக, உங்களுக்கு வாக்களித்த 69 இலட்சம் மக்களை பலிகொடுப்பது நியாயமா என வினவினார்.
'இந்த எண்ணெயை சந்தைக்கு விநியோகித்ததால், பல நிறுவனங்கள் பில்லியன் கணக்கில் இலாபமடைந்துள்ளன. ஆனால், மக்களின் உயிர் ஆபத்தில் சிக்கியுள்ளது' என்றார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .