R.Maheshwary / 2021 ஏப்ரல் 05 , மு.ப. 11:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
புற்றுநோயை ஏற்படுத்தும் எப்லடொக்சின் எனப்படும் பதார்த்தம் அடங்கியுள்ளதென உறுதிப்படுத்தப்பட்டுள்ள 5 தேங்காய் எண்ணெய் கொள்கலன்களை மலேசியாவுக்கு மீண்டும் அனுப்பும் நடவடிக்கை நாளை முன்னெடுக்கப்படவுள்ளதென சுங்க திணைக்களத்தின் அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
கட்டான பிரதேசத்திலுள்ள தனியார் நிறுவனத்துக்குரிய, குறித்த 5 கொள்கலன்களிலும் 100 மெட்றிக் தொன் தேங்காய் எண்ணெய் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை 4 தனியார் நிறுவனங்களால் இறக்குமதி செய்யப்பட்ட 13 தேங்காய எண்ணெய் கொள்கலன்களில் புற்றுநோயை ஏற்படுத்தும் பதார்த்தம் அடங்கியுள்ளமை, ஆய்வுகள் மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .