Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
S.Renuka / 2025 மே 28 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திய மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளதையடுத்து, ஏற்கெனவே ஒப்பந்தம் செய்யப்பட்டது போல் நடிகரும் மக்கள் நீதி மய்யம் தலைவருமான கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பி. ஆகிறார் என திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது,
“ஜூன் 19 நடைபெறவிருக்கும் மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக் கழகத்தில் சார்பில் போட்டியிடும். நான்கு இடங்களில், மூன்று இடங்களுக்கு திமுக வேட்பாளர்களுக்கும், மற்றுமுள்ள ஒரு இடத்துக்கு ஏற்கெனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி மக்கள் நீதி மய்யத்திற்கும் ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் கமல்ஹாசன், கடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலில் கோவை தெற்கில் போட்டியிட்டு தோல்வியை சந்தித்த கமல்ஹாசன், கடந்த மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் இணைந்தார்.
அவர் மக்களவைத் தொகுதியில் போட்டியிடாத நிலையில், கூட்டணி பேச்சுவார்த்தையின் போது, மாநிலங்களவை எம்.பி. பதவி வழங்குவது குறித்து உடன்பாடு செய்யப்பட்டது.
இதையடுத்து, தி.மு.க. கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து தமிழகம் முழுவதும் தீவிர பிரசாரம் செய்தார்.
மக்களவைத் தேர்தலில் திமுக கூட்டணி அனைத்து தொகுதிகளையும் கைப்பற்றியது. எனவே, ஏற்கெனவே செய்யப்பட்ட உடன்பாடு அடிப்படையில் திமுகவில் ஒரு எம்.பி. பதவி கமலுக்கு வழங்கப்படுகிறது.
இதன்மூலம் கமல்ஹாசன் மாநிலங்களவை எம்.பி ஆகிறார்.
16 minute ago
31 minute ago
49 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
16 minute ago
31 minute ago
49 minute ago
53 minute ago