2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

எரிசக்தி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

Freelancer   / 2022 ஓகஸ்ட் 21 , மு.ப. 12:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலைய நடவடிக்கைகளை இன்று (20)  முதல் ஆரம்பித்துள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.

தற்போது 100,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் இறக்கப்பட்டு வருவதாகவும், அடுத்த வாரம் மேலும் 120,000 மெட்ரிக் தொன் கச்சா எண்ணெய் வரும் என எதிர்பார்க்கப்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இன்றிரவு விமான எரிபொருள் கையிருப்பு தரையிறக்கப்பட உள்ளதாகவும், இந்த இரண்டு சரக்குகள் மூலம் சபுகஸ்கந்த சுத்திகரிப்பு நிலையம் 40 நாட்களுக்கு முழு கொள்ளளவுடன் இயங்க முடியும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர  உறுதியளித்துள்ளார். (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .