2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த அதிரடி தீர்மானம்

Freelancer   / 2022 ஓகஸ்ட் 19 , பி.ப. 05:39 - 0     - {{hitsCtrl.values.hits}}

இலங்கையில் உள்ள 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்துவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

தேசிய எரிபொருள் அனுமதி (QR)  வழிகாட்டுதல்களுக்கு அமைய எரிபொருள் நிலையங்கள் இணங்கத் தவறியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

இதற்கமைய 12 எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் விநியோகத்தை இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டதாக அமைச்சர் மேலும் கூறினார்.

மேலும், எரிபொருள் நிரப்பு நிலையங்களைத் தொடர்ந்து கண்காணிக்கவும், பொதுமக்கள் தங்கள் முறைப்பாடுகளை பொலிஸ் நிலையங்களில் சமர்ப்பிக்கவும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. (R)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .