2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

எல்லை நிர்ணய வர்த்தமானி ‘இறுதிக்குள் வரும்’

Kogilavani   / 2017 ஜனவரி 18 , மு.ப. 04:06 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜே.ஏ.ஜோர்ஜ்

எல்லை நிர்ணய ஆணைக்குழு கையளித்துள்ள எல்லை நிர்ணய அறிக்கை, இம்மாத இறுதிக்குள் வர்த்தமானியில் வெளியிடப்படும். அது தொடர்பிலான முழுப் பொறுப்பும் எமது அமைச்சுக்கே உள்ளது என, உள்ளூராட்சி மற்றும் மகாண சபைகள் அமைச்சர் பைஸர் முஸ்தபா தெரிவித்தார்.

எல்லை நிர்ணய ஆணைக்குழுவின் அறிக்கை, உள்ளுராட்சி மற்றும் மகாண சபை அமைச்சர் பைஸர் முஸ்தபாவிடம் நேற்று கையளிக்கப்பட்டது.   

அமைச்சின் அலுவலகத்தில் வைத்து, அறிக்கையை ஆணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ், உத்தியோகபூர்வமாக கையளித்தார்.  

அறிக்கையை ஏற்றுக்கொண்டு கருத்து தெரிவித்த அமைச்சர், எல்லை நிர்ணய ஆணைக்குழுவில் உள்ள 5 உறுப்பினர்களும் கையெழுத்திட்டுள்ள நிலையில் அறிக்கையைப் பெற்றுக்கொண்டேன். 3 பேரின் கையெழுத்துடன் இம்மாத ஆரம்பத்தில் என்னிடம் கையளிக்கப்பட்ட அறிக்கையை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. அவ்வாறு அன்று நான் அதனை ஏற்றுக்கொண்டிருந்தால் சட்டவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டவனாகியிருப்பேன்.  

அறிக்கை கிடைத்ததும் அடுத்த நாள் வர்த்தமானி வெளியிடப்படும் என்று கூறியிருந்தேன். எனினும், அறிக்கையில் உள்ள தட்டச்சு பிழைகள் உள்ளிட்டவற்றை சரி செய்ய கால அவகாசம் தேவை. அறிக்கை கிடைத்துவிட்டதால் எமது அமைச்சின் அதிகாரிகளை இணைத்து இரவு பகல் பாராது அறிக்கையை சரி பார்த்து இந்த மாத இறுதிக்குள் வர்த்தமானி அறிக்கை வெளியிடப்படும்.  

இந்த அறிக்கையை சகல கட்சிகளும் ஏற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கை எனக்கு உள்ளது. முன்னைய ஆட்சியில், உரிய முறையில் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்படாமை காரணமாக, உள்ளுராட்சி மன்றத் தேர்தலை உரிய நேரத்தில் நடத்த முடியவில்லை. எந்த கட்சிகளுக்கும் பாதிப்பு ஏற்படாத வகையில் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார். இதேவேளை, முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய பணிகள் இந்த மாத இறுதிக்குள் பூர்த்தி செய்யப்படுவதுடன். ஜனவரி 31ஆம் திகதியுடன் ஆணைக்குழுவின் கடமை நிறைவுக்கு வரும்” என்று ஆணைக்குழுவின் தலைவர் அசோக பீரிஸ் தெரிவித்தார்.  

இந்த அறிக்கை 3 மொழிகளிலும் 3 பகுதிகளாக தயாரிக்கப்பட்டுள்ளதுடன் 45 புத்தகங்களில் இந்த அறிக்கை அச்சிடப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். இரண்டு 3 முறை இந்த அறிக்கையை சரிபார்த்துள்ளதால், அதனை மீள் சரி பாரக்க அமைச்சின் செயலாளருக்கு அதிக காலம் தேவைப்படாது என்றும் அவர் குறிப்பிட்டார். 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .