S.Renuka / 2026 மார்ச் 25 , பி.ப. 01:13 - 0 - {{hitsCtrl.values.hits}}
நாட்டில் எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை கடுமையான வெப்பநிலையுடனான வானிலை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதன்கிழமை (25) அன்று ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் மெரில் மென்டிஸ்,
சர்வதேச ரீதியில் கடந்த சில ஆண்டுகளில் சராசரி வெப்பநிலை வழமையை விட 1 முதல் 1.5 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரித்துள்ளது. இதுவே தற்போதைய கடும் வெப்ப நிலைக்கு முக்கிய காரணமாகும்.
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள 'எல் நினோ' காலநிலை மாற்றத்தினால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மேலும் அதிகரித்து வருகின்றது.
நாட்டில் மனித உடலுக்குப் பாதிப்பை ஏற்படுத்தக்கூடிய வகையிலான கடும் வெப்பமான வானிலை, எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை நீடிக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் மெரில் மென்டிஸ்,
சர்வதேச ரீதியில் கடந்த சில ஆண்டுகளில் சராசரி வெப்பநிலை வழமையை விட 1 முதல் 1.5 டிகிரி செல்ஸியஸ் வரை அதிகரித்துள்ளது. இதுவே தற்போதைய கடும் வெப்ப நிலைக்கு முக்கிய காரணமாகும்.
பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்டுள்ள 'எல் நினோ' காலநிலை மாற்றத்தினால் கடல் மேற்பரப்பு வெப்பநிலை மேலும் அதிகரித்து வருகின்றது.
கடும் வெப்பத்தினால் ஏற்படக்கூடிய உடல்நல பாதிப்புகளைத் தவிர்க்க பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
48 minute ago
1 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
48 minute ago
1 hours ago
3 hours ago