Editorial / 2019 செப்டெம்பர் 21 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவிலுள்ள வெற்றிடத்துக்கு, இதுவரை உறுப்பினர்கள் எவரும் நியமிக்கப்படவில்லை என, ஐக்கிய தேசியக் கட்சி பொதுச்செயலாளர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்தார்.
அலரி மாளிகையில் இன்று (21) காலை இடம்பெற்ற கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும் போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழுவுக்கு பிரதமருக்கு நெருக்கமானவர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஹேஷா விதானகே இன்று காலை தெரிவித்திருந்தார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்வது தொடர்பில் தாமதம் நிலவும் இந்த சந்தர்ப்பத்தில் புதிய செயற்குழு உறுப்பினர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் பூர்த்தியாகியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
24 minute ago
36 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 minute ago
36 minute ago
54 minute ago