2025 ஜூலை 09, புதன்கிழமை

‘ஐ.தே.க தேர்தலுக்கு அஞ்சுகிறது’

Editorial   / 2018 நவம்பர் 13 , மு.ப. 05:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஐக்கிய ​தேசியக் கட்சிக்குத் தேர்தலை எதிர்கொள்ளப் பயம் வந்துள்ளதுடன், இப்போதே அவர்கள் தேர்தலில் தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளனர். ஆகையால்தான் பொதுத்தேர்தலுக்கு எதிராக நீதிமன்றம் சென்றுள்ளனர் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர், பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார்.

தேர்தலில் வெற்றிப் பெறுவோம் என்ற நம்பிக்கையுள்ள எந்தவோர் அரசியல் கட்சியும் தேர்தலை நடத்துவதற்கு எதிராக, நீதிமன்றத்துக்குச் செல்லாது என்றும் அவர் தெரிவித்துள்ளார். 

​கொழும்பில் நேற்று (12) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே, அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.  

அங்கு அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,  

“ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட மேலும் பல கட்சிகள் பொதுத் தேர்தலை நடத்துவதற்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளமையானது உண்மையான மக்கள் விருப்பம் குறித்து அவர்களுக்குள் பயம் ஏற்பட்டுள்ளமையைக் காட்டிக்கொடுத்துள்ளது” என்றார்.    


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .