2026 மே 03, ஞாயிற்றுக்கிழமை

’ஐ.தே.கவின் முரண்பாட்டால் கோட்டாவுக்கு வெற்றி வாய்ப்பு அதிகம்’

Editorial   / 2019 ஓகஸ்ட் 26 , பி.ப. 12:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவு வழங்குவது தொடர்பில், ஜனாதிபதி  மைத்திரிபால சிறிசேன சரியான தீர்மானமொன்றை எடுப்பார் என, ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார்.

கடுவலையில் இடம்பெற்ற நிகழ்வின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில் நேற்று (25) அவர் இதனைக் கூறியுள்ளார்.

ஜனாதிபதி தேர்தலை அருகில் வைத்துக்கொண்டு வேட்பாளரை பெயரிடமுடியாத நிலை, வரலாற்றில் முதன்முறையாக ஐக்கிய தேசியக்கட்சிக்கு தற்போது ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இவ்வாறான ஒரு நிலையில், கோட்டாபய ராஜபக்ஷ பாரிய வெற்றியை பெற்றுக்கொள்ளும் சந்தர்ப்பம் காணப்படுவதாகவும் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .