2026 ஏப்ரல் 20, திங்கட்கிழமை

ஐ.தே.கவுக்கு தாவும் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்

Editorial   / 2019 டிசெம்பர் 04 , பி.ப. 02:52 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தற்போது அழிவடையும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில், தான் ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து எதிர்கால அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொள்ளும் எண்ணம் இல்லையென்றும் தான் அங்கம் வகித்த ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி தற்போது அழிவடையும் நிலையில் உள்ளதால், தான் எதிர்வரும் நாட்களில் தனது தீர்மானத்தை அறிவிக்கவுள்ளதாகவும் அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்டுள்ளார்.

இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை பறிப்பதற்கு, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி மேற்கொண்டு வரும் முயற்சிக்கு எதிராக  நீதிமன்றத்தை நாடவுள்ளதாக, நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம்.பௌசி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .