2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஐ.நா. பிரதிநிதிகளுடன் ஜனாதிபதி சந்திப்பு

Freelancer   / 2022 ஓகஸ்ட் 19 , மு.ப. 07:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்விற்கும் ஐக்கிய நாடுகள் சபையின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (18) பிற்பகல் இடம்பெற்றது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் ஐக்கிய நாடுகளின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கான பெங்கொக் அலுவலகத்தின் பணிப்பாளர் டேவிட் மஸ்னெக்யன் கார், ஐக்கிய நாடுகளின் நிரந்தர பிரதிநிதி ஹெனா சிங்கர் மற்றும் ஐக்கிய நாடுகளின் வதிவிட ஒருங்கிணைப்பாளர் அலுவலகத்தின் பிரதானி ஆண்ட்ரியாஸ் கர்பாதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஜனாதிபதியின் சர்வதேச விவகாரப் பணிப்பாளர் தினுக் கொழம்பகே, ஜனாதிபதியின் இளைஞர் மற்றும் நிலையான அபிவிருத்தி விவகாரப் பணிப்பாளர் ரந்துல அபேதீர ஆகியோரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர்.  (a)


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .