Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூலை 09, புதன்கிழமை
Editorial / 2018 நவம்பர் 12 , மு.ப. 08:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
இலங்கை நாடாளுமன்றத்தைக் கலைக்கவும் 2019 ஜனவரி 5இல் தேர்தலை நடத்தவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்ததையிட்டு, ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ கெடரெஸ் விசனமடைந்துள்ளார்.
இலங்கையில் நடப்பவை பற்றிய செயலாளர் நாயகத்தின் பிரதி பேச்சாளர் ஃபர்ஹான் ஹக் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக செயன்முறை மற்றும் நிறுவனங்கள் சட்டம், ஒழுங்குகளுக்கு அமைய நடத்தலின் முக்கியத்துவத்தை செயலாளர் நாயகம் வலியுறுகின்றார் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சமாதானம், சகல இலங்கையரதும் பாதுகாப்பு, மனித உரிமைகள் கடப்பாடுகள், நீதி மற்றும் நல்லிணக்கம் என்பவற்றை உறுதி செய்யும்படி கேட்டும் தனது அழைப்பை அவர் மீண்டும் உறுதி செய்தார் என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
7 hours ago
8 hours ago
08 Jul 2025