Editorial / 2021 பெப்ரவரி 02 , மு.ப. 09:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐக்கிய நாடுகள் அமைப்பால் எடுக்கப்படுகின்ற அனைத்து நடவடிக்கைகளும் வெளிப்படையாக இருக்க வேண்டுமென கோரியுள்ள, ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிடப் பிரதிநிதியான மொஹான் பீரிஸ், அனைத்து உறுப்பு நாடுகளையும் பிரதிநிதித்துவப்படுத்துமாறும் அவற்றின் விருப்பங்களைப் பிரதிபலிக்குமாறும் கோரியுள்ளார்.
பூகோள சமூகத்தைச் சூழவுள்ள வெவ்வேறான கலாசாரங்களுக்கு மேலும் பூகோள ரீதியில் பல்வகைமைப்பட்ட ஐக்கிய நாடுகளின் பணியாள் தொகுதியொன்றின் தேவையுள்ளது என ஐக்கிய நாடுகளின் பொதுச் சபையின் 75ஆவது அமர்வில் உரையாற்றும்போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
இதேவேளை, பயங்கரவாதத்துக்கான பொதுவான விரிவாக்கமொன்றுக்கு இணங்க, ஐக்கிய நாடுகள் தவறியுள்ளதாகக் கவலையை வெளியிட்ட பீரிஸ், சர்வதேச பயங்கரவாதத்துக்கு எதிராக முழுமையானதொரு தீர்மானமொன்றை எடுப்பதில் முன்னேற்றம் குறைவாகக் காணப்படுவதாகத் தெரிவித்துள்ளார்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026