2026 மே 04, திங்கட்கிழமை

ஐயையோ அடிக்கிறாங்க…

Editorial   / 2021 மார்ச் 31 , பி.ப. 06:49 - 0     - {{hitsCtrl.values.hits}}

போக்குவரத்து விதிமுறைகளை மீறினார் என்றக் குற்றச்சாட்டின் கீழ், ஓட்டோ சாரதி ஒருவருக்கு எதிராக, போக்குவரத்து பொலிஸார், தண்டனை படிவத்தை நிரப்பியுள்ளார்.

அப்போது, அந்த ஓட்டோ சாரதி தன்பக்க நியாயத்தை தெரிவித்துள்ளார். அதேவேளை வீடியோவும் எடுத்துள்ளார்.

அதனை அறிந்துகொண்டு போக்குவரத்து பொலிஸார், ஓட்டோ சாரதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். சற்றுநேரத்தில் ஐயை​யோ அடிக்கிறாங்க, ஐயையோ அடிக்கிறாங்க… என சாரதி சத்தமிடுகின்றார்.

இந்த சம்பவம் எங்கு இடம்பெற்றது என்பது தொடர்பிலான விவரம் வெளியாகவில்லை. எனினும், அந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகிறது.

இதேவேளை, பன்னிப்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் போக்குவரத்து பொலிஸ் பொறுப்பதிகாரியை முட்டிமோதிவிட்டு தப்பிச்சென்றதாகக் கூறப்படும் லொறியின் சாரதியை, அந்த நிலையத்தைச் சேர்ந்த மற்றுமொரு பொலிஸ் அதிகாரி, நடுவீதியில் வைத்து அடித்து, கீழே தள்ளிவிட்டு அவர் மீதேறி பாய்ந்தமை யாவருக்கும் தெரிந்தது.

அதன்பின்னர், பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்ட அந்த பொலிஸ் அதிகாரி, எதிர்வரும் 5ஆம் திகதி வரையிலும் விளக்கமறியலில் வைக்கப்பட்டார் என்பதும் தெரிந்ததே.

https://twitter.com/i/status/1377214324519829517


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .