2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஒக்ஸ்போர்ட்டுக்கு வந்தது ‘ஐயோ’

Princiya Dixci   / 2016 ஒக்டோபர் 12 , மு.ப. 03:00 - 0     - {{hitsCtrl.values.hits}}

சுமார் 150 வருடங்கள் பழமை வாய்ந்ததும் உலகப் புகழ்பெற்றதுமான ஒக்ஸ்போர்ட் அகராதி, தமிழ் மக்கள் அதிகம் பயன்படுத்தும் ‘ஐயோ’ மற்றும் ‘ஐயா’ என்ற இரண்டு வார்த்தைகளைப் புதிதாகச் சேர்த்துள்ளது.

ஆங்கிலம் பேசுபவர்களுக்காகத் தன்னிடம் 6 இலட்சம் வார்த்தைகளை வைத்துள்ள அந்நிறுவனம், மூன்று மாதங்களுக்கு ஒரு முறை புதிதாக அறிமுகமாகும் சொற்களை இணைத்துக் கொள்வது வழக்கம். இந்நிலையில், ‘ஐயோ’ மற்றும் ‘ஐயா’ என்ற இரண்டு வார்த்தைகளைக் கடந்த செப்டெம்பர் மாதம், புதிதாகச் சேர்த்துள்ளது.

இந்த வார்த்தைகளில் ‘ஐயா’ என்பது ஒருவரை மரியாதையாக அழைக்கவும், ‘ஐயோ’ என்பது ஆச்சரியம் மற்றும் துக்கத்தைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .